38 வயதுடைய குடும்பஸ்த ஒருவர் கொலை!

முல்லேரியாவில் உள்ள பகுதியொன்றில் 38 வயதுடைய குடும்பஸ்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளி யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் நேற்றையதினம் (09-02-2024) இரவு மதுபான விருந்து ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.